நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை ; மதகுபட்டி சேதுநகர் பாண்டி மகன் கோட்டைச்சாமி 34. இவருக்கு திருமணம் முடிந்து, 1.5 வயதில் ஆண் குழந்தை உள்ளது.
இவர் பெங்களூரூவில் கோயில் சிற்ப வேலை செய்கிறார். இவருடன் சேதுநகரை சேர்ந்த சோமன் மகன் ராஜா 40,வும் பணிபுரிகிறார்.
பொங்கலுக்காக இருவரும் சொந்த ஊருக்கு வந்துள்ளனர். ஜன.,15 அன்று ராஜா வீட்டிற்கு சென்ற கோட்டைச்சாமி செலவுக்கு பணம் தர கேட்டுள்ளார்.
இதில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ராஜா, கோட்டைச்சாமியை கையால் தள்ளி விட்டுள்ளார்.
அங்கிருந்தவர்கள் சண்டையை விலக்கிவிட்டு,கோட்டைச்சாமியை வீட்டிற்கு அனுப்பினர். இந்நிலையில் அவர் வீட்டிலேயே இறந்துவிட்டார். மதகுபட்டி எஸ்.ஐ., மகேஸ்வரி, சந்தேக மரணமாக வழக்கு பதிந்துள்ளார்.

