/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கை மாவட்ட கோயில்களில் தைப்பூச விழா
/
சிவகங்கை மாவட்ட கோயில்களில் தைப்பூச விழா
ADDED : ஜன 26, 2024 05:24 AM

சிவகங்கை; மாவட்டத்தில் அனைத்து முருகன் கோயில்களில் தைப்பூச விழாவை முன்னிட்டு பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்தி செலுத்தினர்.
தைப்பூச விழாவை முன்னிட்டு சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட காசிவிஸ்வநாதர் கோயிலில் சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடைபெற்றது. சுவாமி புறப்பாடு நடைபெற்றது. சிவகங்கை அருகே கோவானுார் சுப்பிரமணியர் கோயிலில் சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. அன்னதானம் நடந்தது.
சிவகங்கை வேலாயுதசாமி கோவில் தெருவில் உள்ள வேலாயுத சுவாமி கோயிலில் சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. பறவை காவடி, பால்காவடி மற்றும் பால்குடம் எடுத்து நேர்த்தி செலுத்தினர்.
மானாமதுரை அலங்கார குளம் மயூரநாத முருகன் பாம்பன் குமரகுருதாச கோயிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு காலை யாக வேள்வியும் சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது.
மாலை 4:00 மணிக்கு கோவிலிலிருந்து உற்சவர் புஷ்பத்தேரில் புறப்பட்டு ஆனந்தவல்லி அம்மன் சோமநாதர் சுவாமி கோயில் தேரோடும் வீதியில் வீதி உலா வந்தார்.
*மானாமதுரை வழிவிடும் முருகன் கோவிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றன. பக்தர்கள் பால் குடம் எடுத்து வந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்தனர்.மாலை சுவாமி வீதி உலா நடைபெற்றது.
* வெள்ளிக்குறிச்சி வள்ளி, தெய்வானையுடனான முருகன் கோவிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு பாதயாத்திரை குழு தலைவர் ராமகிருஷ்ணன் தலைமையில் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
பெரும்பச்சேரி முருகன் கோவிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு காவடி,பால்குடம் எடுத்து வந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்தனர்.
குறிச்சி முருகன் கோவிலில் அதிகாலை சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்று ராஜ அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
* நாட்டரசன் கோட்டை அருகே பிரண்டைக்குளம் கிராமத்தில் உள்ள செந்தில் ஆண்டவர் கோயிலில் தைப்பூசம் கொண்டாடப்பட்டது.
முன்னதாக காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மூலவர் செந்தில் ஆண்டவர் சுவாமிக்கு அபிஷேகம் நடந்தது.
* திருப்புத்துார் அருட்பெருஞ்ஜோதி சத்திய தர்மசாலையில் தைப்பூச அன்னதான விழா நடந்தது. அரசு மருத்துவமனை அருகில் உள்ள சத்திய தர்மசாலை வளாக அன்னதான மையத்தில் அதிகாலையில் கொடியேற்றம் நடந்தது.
தொடர்ந்து பூஜை நடைபெற்று தைப்பூசத்தை முன்னிட்டு காலை 11:00 மணிக்கு டாக்டர்கள் எம் செல்வ முத்துக்குமார், ஆர்.லாவண்யா சத்திய தர்மசாலை ஜோதியை ஏற்றிவைத்தனர்.
பின்னர் அன்னதானத்தை துவக்கி வைத்தனர், தர்மசாலை மாவட்ட செயலாளர் நாகசுப்ரமணியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பொறியாளர் குணசேகரன், முன்னாள் துணை தாசில்தார் சுப்பிரமணியன், முன்னாள் வி.ஏ.ஓ. சேகர், காரையூர் சின்னையா, தியாகலிங்கம், காளையப்பன் பங்கேற்றனர்.
*
குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி
நேற்று அதிகாலை சண்முகநாதப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. காரைக்குடி தேவகோட்டை மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் காவடிகள் எடுத்து சண்முகநாத பெருமான் சன்னதியில் காவடியை செலுத்தினர். காரைக்குடி கண்டனுார் பள்ளத்தூர் புதுவயல் உட்பட பல்வேறு பகுதிகளிலுள்ள முருகன் கோயில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.
சிங்கம்புணரி: சிங்கம்புணரி கோயில்களில் தைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.
உலகம்பட்டி ஞானியார் மடத்தில் உள்ள தண்டாயுதபாணி கோயில் தைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
பக்தர்கள் காவடி எடுத்து வந்து தண்டாயுத பாணியை வழிபட்டனர். இன்று (வெள்ளிக்கிழமை) பால்குடம், பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. புழுதிபட்டி சத்திரம் முருகன் கோயிலில் சிறப்பு அபிஷேக வழிபாடு நடந்தது. கட்டுக்குடிபட்டி வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேகம் வழிபாடு நடந்தது.
சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேகம் வழிபாடு நடந்தது. வெள்ளித்தேரில் சேவுகப் பெருமாள் அய்யனார் உள்பிரகாரத்தில் வீதி உலா வந்தார். பக்தர்கள் பங்கேற்றனர்.
முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயில் தைப்பூசத்தை ஒட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.

