/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வருவாய், போலீஸ் மனதை பதற வைத்த சம்பவங்கள் மே முதலே தொடங்கிய பீதி....
/
வருவாய், போலீஸ் மனதை பதற வைத்த சம்பவங்கள் மே முதலே தொடங்கிய பீதி....
வருவாய், போலீஸ் மனதை பதற வைத்த சம்பவங்கள் மே முதலே தொடங்கிய பீதி....
வருவாய், போலீஸ் மனதை பதற வைத்த சம்பவங்கள் மே முதலே தொடங்கிய பீதி....
ADDED : ஜூலை 05, 2025 02:41 AM
சிவகங்கை:சிவகங்கை மாவட்டத்தில் வருவாய், போலீஸ் அதிகாரிகளின் மனதை 'திக்...திக்...' என வைக்கும் விதமாக கடந்த இரண்டு மாதமாக இங்கு நடக்கும் பல்வேறு அசம்பாவித சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
மே முதலே திக்...திக்... சிவகங்கை
சிவகங்கை மாவட்டம், வானம் பார்த்த பூமியாக இருப்பதால், பெரும்பாலான இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு சென்று விடுகின்றனர். இந்த சூழலில் இங்கு செயல்படும் கிரஷர், கிராவல் குவாரிகள், செங்கல் சூளைகளில் தொழிலாளர்கள் பணிபுரிந்து வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர்.
மே 20 காலை 9:25 மணிக்கு சிங்கம்புணரி அருகே மல்லாக்கோட்டை மேகா புளூமெட்டல்ஸ் கிரஷர் குவாரியில் பாறை சரிந்த விபத்தில் பொக்லைன் டிரைவர் ஒடிசாவை சேர்ந்த ஹர்ஜித் 28, ஓடைப்பட்டி முருகானந்தம் 49, மதுரை மாவட்டம், இ.மலம்பட்டி ஆறுமுகம் 50, ஆண்டிச்சாமி 50, குழிச்சிவல்பட்டி கணேசன் 43, துாத்துக்குடி எட்டையபுரம் மைக்கேல்ராஜ் 43, ஆகிய 6 பேர் பலியாகினர்.
லைசென்ஸ் காலாவதியாகி 8 மாதங்களாக கிரஷர் குவாரி இயங்கியதால் குவாரியின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டது.
குவாரி உரிமையாளர் உட்பட சிலர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். அப்போதைய தாசில்தார், கனிம வள வருவாய் ஆய்வாளர், வி.ஏ.ஓ.,க்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மடப்புரம் காவலாளி மரணம்
இம்மாவட்டத்தில் கிரஷர் குவாரி விபத்துக்கான 'சுவடு' மறைவதற்குள் ஜூன் 27 அன்று மடப்புரம் பத்ரகாளி கோயிலுக்கு வந்த பேராசிரியை நிகிதாவின் காரை நிறுத்த அங்கிருந்த காவலாளி அஜித்குமாரிடம் 29, கூறியுள்ளார். மீண்டும் காரை எடுத்து சென்ற பின் பையில் இருந்த நகை திருடு போனதாக திருப்புவனம் போலீசில் புகார் செய்தார்.
மானாமதுரை தனிப்படை போலீசார் விசாரணை என்ற பெயரில் அஜித்குமாரை தாக்கியதில் உடலில் 40 க்கும் மேற்பட்ட ரத்த காயங்கள் ஏற்பட்டு பலியானார். இதையடுத்து 5 போலீசாரை கைது செய்தனர். சிவகங்கை எஸ்.பி., ஆஷிஷ் ராவத்தை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றினர். மானாமதுரை டி.எஸ்.பி., சண்முகசுந்தரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
அஜித்குமார் கொலை செய்யப்பட்ட விவகாரம் தமிழக அரசியல் களத்தில் பூகம்பத்தை கிளப்பியுள்ளது. அதே போன்று சிங்கம்புணரி அருகே தனியார் பள்ளிக்கு சென்ற 2 ம் வகுப்பு மாணவர் அஸ்விந்த் 7, பள்ளியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து சர்ச்சை எழுந்தது.
2 நாட்களாக அவரது உடலை வாங்காமல், பெற்றோர், உறவினர்கள் சிங்கம்புணரியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அமைச்சர் பெரியகருப்பன் உட்பட போலீசார் சமரசம் செய்த பின்னரே உடலை வாங்கினர்.
ஜூலை 1 அன்று காளையார்கோவில் அருகே ஆண்டிச்சியூரணி விடுதியில் தங்கியிருந்த இளையான்குடி அருகே விஸ்வநாதபுரத்தை சேர்ந்த 9ம் வகுப்பு படிக்கும் மாணவி பிருந்தா 13, விடுதி மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்தார்.
இது குறித்தும் சர்ச்சை எழுந்ததால், அவரது பெற்றோர், உறவினர்கள் சிவகங்கை அரசு மருத்துவ கல்லுாரி முன்பாக ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடமும் போலீசார் சமரசம் பேசி அனுப்பி வைத்தனர். இது போன்று தொடர்ந்து வருவாய், போலீசாரை எப்போதும் 'திக்...திக்...' என்ற மனநிலையில் வைக்கும் நிலைக்கு சிவகங்கை மாவட்டத்தில் மே மாதம் முதல் அதிர்ச்சி சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.