ADDED : பிப் 05, 2024 11:54 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோஷ்டியூர் : சிங்கம்புணரி ஒன்றியம் எஸ்.மாம்பட்டி இந்திராநகரைச் சேர்ந்தவர் கரந்தன் மகன் கரந்தமலை58. இவர் நேற்று முன்தினம் இரவு டூ வீலரில் ஹெல்மெட் அணியாமல் திருப்புத்துாருக்கு தெற்கு இளையாத்தங்குடி வி.ஏ.ஓ. ராஜசேகருடன் வந்துள்ளார்.
இரவு 9:30 மணிக்கு அரளிக்கோட்டை விலக்கு பாலம் அருகில் சென்ற போது டூ வீலர் கட்டுப்பாட்டை இழந்து விழுந்ததில் கரந்தமலை தலையில் காயம் அடைந்து இறந்தார். பின்னால் அமர்ந்திருந்த ராஜசேகர் திருப்புத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். திருக்கோஷ்டியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.