நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பூவந்தி : பூவந்தி அருகே கிளாதரியில் வேளாண் துறை சார்பாக மாவட்ட அளவிலான ஒரு நாள் பயிற்சி முகாம் நடந்தது.
முகாமில் வேளாண் உதவி இயக்குனர் மலர்விழி வேளாண் துறை சார்ந்த திட்டங்கள், விவசாயிகளுக்கான மானியங்கள் பற்றி கூறினார்.
உதவி செயற்பொறியாளர் விஜயராணி நுண்ணீர் பாசன மேலாண்மை மற்றும் தானியங்கி முறைகள் குறித்து விளக்கமளித்தார். தோட்டக்கலை சார்ந்த திட்டங்கள்,நுண்ணீர் பாசனம் குறித்து தோட்டக்கலை உதவி இயக்குனர் சர்மிளா விளக்கமளித்தார்.
தொழில்நுட்ப மேலாளர் சத்யா, உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் நந்தினி, சண்முகப்பிரியா பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.