/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரை பஸ் ஸ்டாண்டில் பயணிகள் இடத்தில் டூவீலர்
/
மானாமதுரை பஸ் ஸ்டாண்டில் பயணிகள் இடத்தில் டூவீலர்
ADDED : மே 18, 2025 12:19 AM

மானாமதுரை: மானாமதுரை புது பஸ் ஸ்டாண்டில் பயணிகள் அமரும் இடத்தில் ஏராளமானோர் டூவீலர்களை நிறுத்தி வைப்பதால் பயணிகள் அமர இடமின்றி அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மானாமதுரை புது பஸ் ஸ்டாண்டில் இருந்து மதுரை, திருச்சி, சென்னை, கோவை, ஈரோடு, திருப்பூர், அருப்புக்கோட்டை, விருதுநகர், பரமக்குடி, ராமநாதபுரம், ராமேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கும் மானாமதுரையை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளுக்கும் 400க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இவர்களின் வசதிக்காக பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் பயணிகள் அமர இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் கடந்த சில மாதங்களாக இந்த இடத்தில் பயணிகள் உட்கார இடமின்றி ஏராளமானோர் டூவீலர்களை நிறுத்தி வைப்பதால் மக்கள் சிரமப்படுகின்றனர்.
நகராட்சி நிர்வாகம் பயணிகள் அமரும் இடத்தில் டூவீலர்களை நிறுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.