நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி; சிங்கம்புணரி அருகே சிவபுரிபட்டியில் சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட தர்மசம்வர்த்தினி உடனுறை சுயம்பிரகாஷ ஈஸ்வரர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி வடுக பைரவர் பூஜை நடந்தது.
மதியம் 12:00 மணிக்கு யாகவேள்வி நடத்தப்பட்டு பைரவருக்கு அபிஷேகம், வழிபாடு நடத்தப்பட்டது. கண்காணிப்பாளர் ஜெய்கணேஷ் முன்னிலையில் ரவி சிவாச்சாரியார் பூஜைகளை நடத்தி வைத்தார்.
பிரான்மலை மங்கை பாகர் கோயிலில் வடுகபைரவருக்கும், முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் காலபைரவருக்கும் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

