ADDED : பிப் 29, 2024 11:55 PM
சிவகங்கை - காளையார்கோவில் அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் மணி மகன் சிவா 21. இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு சிறுமியை 2016ம் ஆண்டு நவ.17 அன்று திருமணம் செய்து கொள்வதாக கூறி ஊருக்கு வெளியே அழைத்துச் சென்று கொலை செய்துள்ளார்.
சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் காளையார்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிவாவை கைது செய்தனர். அப்போது காளையார்கோவில் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ.,யாக லெனின் அப்பாத்துரை இந்த வழக்கை விசாரித்துள்ளார்.
எஸ்.ஐ., லெனின்அப்பாத் துரை தற்போது கோவையில் பணிபுரிந்து வருகிறார். இந்த வழக்கு சிவகங்கை போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கு விசாரணைக்கு சாட்சி சொல்ல எஸ்.ஐ., லெனின்அப்பாத்துரை கடந்த 7 மாதமாக ஆஜராகவில்லை. நீதிபதி சரத்ராஜ் எஸ்.ஐ., லெனின் அப்பாதுரைக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து வரும் மார்ச் 14 அன்று நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டார்.

