/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரையில் சமுதாய கூடம் கட்டப்படுமா
/
மானாமதுரையில் சமுதாய கூடம் கட்டப்படுமா
ADDED : பிப் 01, 2024 11:40 PM

மானாமதுரை : மானாமதுரையில் ஏற்கனவே இருந்த சமுதாயக்கூடம் இடிக்கப்பட்ட நிலையில் புதிதாக சமுதாயக்கூடம் கட்ட வேண்டும் என பொது மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மானாமதுரை நகராட்சியில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மானாமதுரை பேரூராட்சியாக இருந்த போது மானாமதுரை எம்.எல்.ஏ., அலுவலகம் பின்புறம் சமுதாயக்கூடம் செயல்பட்டு வந்தது.இதனை மக்கள் பயன்படுத்தி வந்த நிலையில் இக்கட்டடம் மிகவும் சேதமடைந்ததை தொடர்ந்து இடிக்கப்பட்டு தற்போது அந்த இடம் காலியாக உள்ளது.
கடந்த 2 வருடங்களுக்கு முன்பு மானாமதுரை பேரூராட்சி, நகராட்சியாக மாற்றம் செய்யப்பட்டது.இதனைத் தொடர்ந்து இப்பகுதியில் நகராட்சி சார்பில் சமுதாயக்கூடம் கட்ட வேண்டுமென்று பொதுமக்கள் எதிர்பார்த்த நிலையில் சமுதாய கூடம் இல்லாததால் பொதுமக்கள் விசேஷங்களை தனியார் மஹாலில் நடத்த வேண்டிய சூழ்நிலை உள்ளதாக கூறி வருகின்றனர்.
நகராட்சி நிர்வாகம் நகராட்சி பகுதியில் புதிதாக சமுதாயக்கூடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

