/
உள்ளூர் செய்திகள்
/
தென்காசி
/
திருமணத்திற்கு இருவீட்டார் எதிர்ப்பு காதலன், கர்ப்பிணி காதலி தற்கொலை
/
திருமணத்திற்கு இருவீட்டார் எதிர்ப்பு காதலன், கர்ப்பிணி காதலி தற்கொலை
திருமணத்திற்கு இருவீட்டார் எதிர்ப்பு காதலன், கர்ப்பிணி காதலி தற்கொலை
திருமணத்திற்கு இருவீட்டார் எதிர்ப்பு காதலன், கர்ப்பிணி காதலி தற்கொலை
ADDED : ஜூன் 01, 2025 01:55 AM
திருப்பத்துார், திருப்பத்துார் அருகே, திருமணத்திற்கு இருவீட்டாரும் எதிர்ப்பால், காதலன் ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டார். இதனால், கர்ப்பிணி காதலியும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பத்தை சேர்ந்தவர் நித்தின் ராகுல், 21, ஜோலார்பேட்டை அடுத்த காவேரிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் தரணி, 21. இருவரும் பெங்களூருவிலுள்ள வியாசா நர்சிங் கல்லுாரியில், 2ம் ஆண்டு படித்தபோது, காதல் ஏற்பட்டு, கல்லுாரிக்கு சரியாக செல்லாமல், ஒன்றாக ஊர் சுற்றித்திரிந்தனர். இதில் தரணி, 9 மாத கர்ப்பமானார். இத னால், நித்தின் ராகுலிடம் திருமணம் செய்து கொள்ள வலியுறுத்தினர்.
திருமணத்திற்கு இரு வீட்டாரும் எதிர்ப்பால், மனமுடைந்த நித்தின் ராகுல், நேற்று முன்தினம் நள்ளிரவு, பெரியாங்குப்பம் பகுதியில் ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டார். இதையறிந்த தரணி, நேற்று காலை, வாணியம்பாடி ரயில்வே ஸ்டேஷன் அருகே சென்னையிலிருந்து பெங்களூரு நோக்கி சென்ற ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதில், தரணி வயிற்றிலிருந்த பச்சிளம் சிசுவும், வயிற்றிலிருந்து வெளியேறி இறந்த நிலையில் தனியாக விழுந்து கிடந்தது. இது பார்ப்போரை கண்கலங்க செய்தது. ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.