/
உள்ளூர் செய்திகள்
/
தென்காசி
/
ரேஷன் கடை வேலைக்கு ரூ. 10 லட்சம் தரணும் தி.மு.க., நிர்வாகி புலம்பல் வீடியோ வைரல்
/
ரேஷன் கடை வேலைக்கு ரூ. 10 லட்சம் தரணும் தி.மு.க., நிர்வாகி புலம்பல் வீடியோ வைரல்
ரேஷன் கடை வேலைக்கு ரூ. 10 லட்சம் தரணும் தி.மு.க., நிர்வாகி புலம்பல் வீடியோ வைரல்
ரேஷன் கடை வேலைக்கு ரூ. 10 லட்சம் தரணும் தி.மு.க., நிர்வாகி புலம்பல் வீடியோ வைரல்
ADDED : ஜூன் 21, 2025 09:16 PM
தென்காசி:தென்காசியில் ரேஷன் கடை வேலைக்கு ரூ. 7லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரை வாங்குவதாக தி.மு.க. கிளைச் செயலாளர் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.
தென்காசி மாவட்டம் கடையநல்லுார் அருகே சொக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்த தி.மு.க. கிளை நிர்வாகி சுப்பிரமணியன் , தென்காசிக்கு தி.மு.க., எம்.பி., கனிமொழி வந்திருந்த போது மனு கொடுக்க வந்தார். ஆனால் அவரை நிர்வாகிகள் அனுமதிக்கவில்லை.
எனவே தனது மனுவை ஒன்றிய செயலாளரிடம் கொடுத்ததாக கூறி அவர் கட்சி அலுவலகம் முன்பாக நின்று பேசும் ஒரு வீடியோ வெளியானது. அதில் ' தென்காசி தி.மு.க., வில் நான் 1980 முதல் செயல்பட்டு வருகிறேன்.
தி.மு.க.,வினரின் குடும்பத்தினருக்கு ரேஷன் கடை போன்ற ஏதாவது ஒரு வேலைக்கு முயற்சித்தால் கிடைப்பதில்லை. ரேஷன் கடை வேலைக்கு ரூ. 7 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரை லஞ்சமாக வாங்குகின்றனர். ரூ.10 லட்சம் கொடுத்துவிட்டு வேலைக்கு வருபவர் ரேஷன் பொருளில் தானே கை வைப்பார். கடையநல்லுார் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளிலிருந்து தனியார் ஆலைக்கு அரிசி செல்வது எங்களுக்கு தெரியும்.
இதுகுறித்து கடையநல்லுார் பொறுப்பாளர்களிடம் பேசினால் 'நானே எனது மகனுக்கு மின்வாரியத்தில் வேலை வாங்க ரூ. 5 லட்சம் கொடுத்ததாக தி.மு.க., நிர்வாகி ஒருவர் கூறுகிறார்'. பணம் வைத்திருப்பவர் கொடுக்கலாம். கட்சிக்காக உழைத்த நாங்கள் எங்கே செல்வது. எனவே சாதாரண வேலைக்கு கூட ரூ. 7 லட்சம் ரூ. 10 லட்சம் என வாங்குவது அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் என அவர் பேசும் வீடியோ வைரலாகி வருகிறது.