/
உள்ளூர் செய்திகள்
/
தென்காசி
/
மனைவியை கொலை செய்த கணவர் போலீசில் சரண்
/
மனைவியை கொலை செய்த கணவர் போலீசில் சரண்
ADDED : ஜூன் 26, 2025 01:59 AM

தென்காசி:ஆலங்குளம் அருகே தகராறில் மனைவியை வெட்டிக்கொலை செய்த கணவர் போலீசில் சரணடைந்தார்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே ராமநாதபுரம், மேலகாட்டூரை சேர்ந்தவர் முருகப்பெருமாள் 38. லாரி டிரைவர். மனைவி மகாலட்சுமி 35. இவர்களுக்கு முத்துசெல்வம், செந்தில்குமார் ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.
முருகப்பெருமாள் கடந்த 2 மாதங்களாக டிரைவர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். நண்பர்களுடன் வெளியே சுற்றித் திரிந்துள்ளார். மகாலட்சுமி வீட்டில் காளான் உற்பத்தி, பூலாங்குளத்தில் டெய்லர் கடை, காய்கறி கடை என பல வேலைகள் செய்து குடும்பத்தை கவனித்து வந்தார்.
குடும்பச் செலவு, தொழில் முயற்சிகளுக்கு வாங்கிய கடன்கள் அதிகமானதால் இருவருக்கும் இடையே தினமும் சண்டை ஏற்பட்டது. நேற்று முன்தினம் மாலை தகராறு ஏற்பட்டு மகாலட்சுமியின் அலைபேசியை முருகப்பெருமாள் பறித்து உடைத்தார். நேற்று காலை மகாலட்சுமி சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போதும் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரத்தில் முருகப்பெருமாள் மனைவியை முதுகிலும் கழுத்திலும் சரமாரியாக அரிவாளால் வெட்டிக் கொலை செய்தார். பின்னர் அரிவாளுடன் ஆலங்குளம் போலீசில் சென்று சரணடைந்தார். போலீசார் அவரை கைது செய்தனர்.