/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறையில் ஆர்.டி.ஓ.,க்கள் நிரந்தரமாக நிரப்பப்படாததால் தேங்கி கிடக்கும் பணிகள்
/
தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறையில் ஆர்.டி.ஓ.,க்கள் நிரந்தரமாக நிரப்பப்படாததால் தேங்கி கிடக்கும் பணிகள்
தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறையில் ஆர்.டி.ஓ.,க்கள் நிரந்தரமாக நிரப்பப்படாததால் தேங்கி கிடக்கும் பணிகள்
தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறையில் ஆர்.டி.ஓ.,க்கள் நிரந்தரமாக நிரப்பப்படாததால் தேங்கி கிடக்கும் பணிகள்
ADDED : ஜூலை 31, 2024 01:49 AM
தஞ்சாவூர்:தஞ்சாவூர் ஆர்.டி.ஓ.,அலுவலகத்தில் பணியாற்றிய ஆர்.டி.ஓ., முருகன் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு பணி ஓய்வு பெற்றார். இதையடுத்து ஆர்.டி.ஓ., செயலாக்கம் பணி பொறுப்பில் இருந்த சரவணபவன் என்பவர் பணியாற்றி வந்தார். அவருக்கும் உடல்நிலை சரியில்லாததால் கடந்த ஜூலை 1ம் தேதியில் இருந்து மருத்துவ விடுப்பில் சென்றார்.
இதையடுத்து, ஆர்.டி.ஓ., இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் ஆனந்த் என்பவர் கூடுதல் பொறுப்பில் பணயாற்றி வருகிறார். இவர் வாய்மொழி உத்தரவின் படி ஆர்.டி.ஓ., பொறுப்பில் இருப்பதால், ஆர்.டி.ஓ., கையெழுத்து போடக்கூடிய எந்த பணியையும் அவர் மேற்கொள்ள முடியாத சூழலில், புதிய வாகனங்கள் பதிவு, வெளிநாடு வாகன டிரைவிங் லைசன்ஸ் ஆகிய பணிகள் தேங்கி கிடக்கிறது.
இதனால், தஞ்சாவூர் மற்றும் பட்டுக்கோட்டை ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் பணியாற்றும் 20 ஊழியர்களுக்கு இம்மாதம் சம்பளத்துக்குரிய பட்டியலிலும் கையெழுத்து போட முடியாத நிலை உள்ளதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த மாதம் பணியாளர்களுக்கு சம்பளம் எப்படி வழங்கப்படும் என தெரியாத நிலையில் பணியாளர்கள் உள்ளனர்.
அதே போல, கும்பகோணம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், ஆர்.டி.ஓ., பணியிடம் காலியாக இருப்பதால், புதுக்கோட்டை ஆர்.டி.ஓ., செயலாக்க அலுவலர் கோகிலாவை கூடுதல் பொறுப்பாக நியமித்துள்ளனர்.
மயிலாடுதுறை ஆர்.டி.ஓ., அலுவலத்தில், ஆர்.டி.ஓ., பணியிடம் காலியாக உள்ளதால், கோவை ஆர்.டி.ஓ., செயலாக்கம் ஈஸ்வரமூர்த்தி என்பவர் மயிலாடுதுறைக்கு பொறுப்பாக நியமித்துள்ளனர்.
இவர்கள் கடந்த ஒரு மாத காலமாக பணியாற்றி வந்தாலும், நிரந்தர ஆர்.டி.ஓ., இல்லாததால், அலுவலக பணிகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதால் பணியாளர்கள் மத்தியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆர்.டி.ஓ., அலுவலக பணியாளர்கள் கூறியதாவது: தஞ்சாவூர்,கும்பகோணம்,மயிலாடுதுறையில் ஆர்.டி.ஓ., இல்லாத சூழலில், பொதுமக்கள் ஆர்.டி.ஓ.,விடம் பெற வேண்டிய கையெழுத்துகளுடன் கூடிய ஆவணங்கள் பெற முடியாத நிலையில் உள்ளனர். தமிழகம் முழுவதும் பல ஆர்.டி.ஓ., பணியிடங்கள் காலியாக உள்ளது. இதற்கு அரசு உடனே தீர்வு காண வேண்டும். ஆர்.டி.ஓ., பணியிடங்களை நிரம்ப வேண்டும் இவ்வாறு தெரிவித்தனர்.