sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தஞ்சாவூர்

/

நம்மாழ்வார் வேளாண் ஆராய்ச்சி நிலையம் அமைக்க இடம் தேர்வு பணி

/

நம்மாழ்வார் வேளாண் ஆராய்ச்சி நிலையம் அமைக்க இடம் தேர்வு பணி

நம்மாழ்வார் வேளாண் ஆராய்ச்சி நிலையம் அமைக்க இடம் தேர்வு பணி

நம்மாழ்வார் வேளாண் ஆராய்ச்சி நிலையம் அமைக்க இடம் தேர்வு பணி


ADDED : ஜூன் 13, 2024 02:13 AM

Google News

ADDED : ஜூன் 13, 2024 02:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம் இளங்காடு கிராமத்தில் கடந்த 1938ம் ஆண்டு வேளாண் விஞ்ஞானி என போற்றப்படும் நம்மாழ்வார் பிறந்தார். பசுமைப் புரட்சி, நிலச்சீர்திருத்தம், தொழில்மயமாக்கம் ஆகியவற்றுக்கும், மரபணு மாற்ற விதைகள் உற்பத்திக்கு எதிராகவும் குரல் கொடுத்தார்.'

தமிழின வாழ்வியல் பல்கலைக்கழகம்' என்ற அமைப்பு மூலம், கிராமப் புறங்களில் இயற்கை வேளாண் சார்ந்த கருத்தரங்கம், பயிற்சி வகுப்புகளை நடத்தினார். 'பேரிகை' என்ற இயற்கை உழ வாண்மை வாழ்வியல் மாத இதழையும் நடத்தி வந்தார்.

'உழவுக்கும் உண்டு வரலாறு', 'தாய்மண்ணே வணக்கம்' போன்ற நுால்களை எழுதினார்.

தமிழக அரசு 'சுற்றுச் சூழல் சுடரொளி' விருது வழங்கியது. கடந்த 2013ம் ஆண்டு டிச.30ம் தேதி மறைந்தார்.

இந்நிலையில், நம்மாழ்வரில் வேளாண் ஆராய்ச்சி நிலையம், நினைவு மணிமண்படம், அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என கடந்த பல ஆண்டுகளாக தமிழக அரசிடம் விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

கடந்த 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது, அ.தி.மு.க., தி.மு.க., என இரண்டு கட்சியினரும் தங்களுது தேர்தல் அறிக்கையில் நம்மாழ்வாருருக்கு மணிமண்டபம் கட்டப்படும் என தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தனர்.

தற்போது தஞ்சாவூர் அருகே காட்டுத்தோட்டத்தில் வேளாண் இணை இயக்குநர் அலுவலகம் உள்ள பகுதியில், நம்மாழ்வார் வேளாண் ஆராய்ச்சி நிலையம், நினைவு மணிமண்டபம் அமைப்பதற்கான இடம் தேர்வு பணிகளில் வேளாண் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலர் சுவாமிமலை விமல்நாதன்; முதல்வர் ஸ்டாலினிடம் விவசாயிகள் தொடர் கோரிக்கையை வைத்தோம். இதையடுத்து நம்மாழ்வாருக்கு மணிமண்டபம் அமைப்பது மகிழ்ச்சி.

இருப்பினும், சுற்றுலா மையாகவும், நம்மாழ்வார் பிறந்த பகுதியாகவும் உள்ள கல்லணையில் நினைவு மணிமண்டபம் அமைப்பது மிக சரியாக இருக்கும்.

அரசு இதனை பரிசீலனை செய்ய வேண்டும். வேளாண் ஆராய்ச்சி நிலையம், நினைவு மணிமண்டபத்துடன் அருங்காட்சியகமும் அமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கூறினார்.






      Dinamalar
      Follow us