/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
மனைவி தற்கொலையால் கணவரும் விபரீத முடிவு
/
மனைவி தற்கொலையால் கணவரும் விபரீத முடிவு
ADDED : செப் 29, 2025 02:10 AM
தஞ்சாவூர்: கணவன் வேலைக்கு செல்லாததால், மனமுடைந்த மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். மனைவி இறந்ததை அறிந்தகணவரும் தற்கொலை செய்து கொண்டார்.
தஞ்சாவூர் அருகே திருநகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்பாபு, 45. இவரது மனைவி அமுதா, 40. சுரேஷ்பாபு, சில மாதங்களாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். இதனால் கணவன், மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
நேற்று முன்தினம், தம்பதி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. நேற்று காலை எழுந்த சுரேஷ் பாபு, தன் மனைவியை எழுப்பிய போது, மூச்சின்றி கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
அப்போது தான் அமுதா விஷம் குடித்தது தெரியவந்தது. இதையடுத்து, சுரேஷ்பாபுவும் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். காலை வெகு நேரமாகியும் வீட்டு கதவு திறக்கப்படாததால், அக்கம்பக்கத்தினர் கள்ளப்பெரம்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார், வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அமுதா இறந்து கிடந்தார். சுரேஷ்பாபு உயிருக்கு ஆபத்தான நிலையில் தஞ்சாவூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். கள்ளப்பெரம்பூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

