/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
மேயர், எம்.எல்.ஏ.,வுக்காக இரு தடவை நடந்த புதிய பஸ் துவக்க விழா கூத்து
/
மேயர், எம்.எல்.ஏ.,வுக்காக இரு தடவை நடந்த புதிய பஸ் துவக்க விழா கூத்து
மேயர், எம்.எல்.ஏ.,வுக்காக இரு தடவை நடந்த புதிய பஸ் துவக்க விழா கூத்து
மேயர், எம்.எல்.ஏ.,வுக்காக இரு தடவை நடந்த புதிய பஸ் துவக்க விழா கூத்து
ADDED : ஜன 26, 2024 02:27 AM
தஞ்சாவூர்:தஞ்சாவூர் - திருச்சி, வழித்தடத்தில் ஒரு புதிய பஸ், கல்லணையிலிருந்து திங்களூர் - சந்திரன் கோவில், வழியாக, கும்பகோணம் வரை மற்றொரு புதிய பஸ் இயக்கப்படுகிறது. இதற்கான துவக்க விழா, தஞ்சாவூர் புதிய பஸ் ஸ்டாண்டில் நேற்று காலை ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. நிகழ்ச்சியில் தஞ்சாவூர் எம்.எல்.ஏ. நீலமேகம் கொடியசைத்துத் பஸ் போக்குவரத்தை துவங்கி வைப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிகழ்ச்சிக்காக, மாநகராட்சி மேயர் ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி உள்ளிட்டோர் தஞ்சாவூர் எம்.எல்.ஏ. நீலமேகத்திற்காக காத்திருந்தனர். இந்நிலையில், மேயர் ராமநாதன் உள்ளிட்டோர் காத்திருப்பதால், போக்குவரத்துத் துறை அதிகாரிகள், மேயர், கட்சி நிர்வாகிகளை வைத்து, ஒரு பஸ்சுக்கு கொடியசைத்துத் துவக்கி வைத்தனர். பின், மேயர் ராமநாதன் புறப்பட்டு சென்று விட்டார்.
இதையடுத்து, எம்.எல்.ஏ. நீலமேகம் வந்தபின், அவர் கையில் ஒரு கொடியைக் கொடுத்து, அவரையும் கொடியசைக்க வைத்து, போட்டோவுக்கு போஸ் கொடுத்தப்படி நின்றனர். இந்த கூத்தை வேடிக்கை பார்த்த போக்குவரத்து ஊழியர்கள் காலக்கொடுமை என முணுமுணுத்தபடி சென்றனர்.
இருப்பினும் மேயருக்கும், எம்.எல்.ஏ.வுக்கும் கோஷ்டிபூசல் இருப்பதால் இப்படி ஒரு சம்பவம் நடந்தாகவும் கூறப்படுகிறது.

