/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
தொழிலாளி அடித்து கொலை அடகுகடை உரிமையாளர் கைது
/
தொழிலாளி அடித்து கொலை அடகுகடை உரிமையாளர் கைது
ADDED : ஜூன் 20, 2025 01:43 AM
தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே துக்காச்சி கிராமத்தை சேர்ந்த பாக்கியராஜ், 35; கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு நாச்சியார்கோவில் கடைத்தெருவில், குடிபோதையில் பலரிடம் தகராறு செய்தார்.
பின்னர், நாச்சியார் கோவில் வடக்கு வீதியில் உள்ள அடகு கடை முன் நின்று கொண்டு, அங்கு பணியாற்றும் மூன்று பெண்களை தரக்குறைவாக பேசினார். இதனால், கடை உரிமையாளர் சிவசிதம்பரம், 39, ஆத்திரமடைந்து, பாக்கியராஜை கட்டையால் தாக்கினார்.
ஏற்கனவே பாக்கியராஜ் தலையில், 10 தையல் போடப்பட்டிருந்த நிலையில், சிவசிதம்பரம் தாக்கியதில், சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து இறந்தார். நாச்சியார்கோவில் போலீசார், சிவசிதம்பரத்தை நேற்று கைது செய்து விசாரிக்கின்றனர்.