/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
சுடுகாட்டில் கருப்பு கொடியுடன் கரும்பு விவசாயிகள் போராட்டம்
/
சுடுகாட்டில் கருப்பு கொடியுடன் கரும்பு விவசாயிகள் போராட்டம்
சுடுகாட்டில் கருப்பு கொடியுடன் கரும்பு விவசாயிகள் போராட்டம்
சுடுகாட்டில் கருப்பு கொடியுடன் கரும்பு விவசாயிகள் போராட்டம்
ADDED : ஜன 16, 2024 11:53 PM
திருமண்டங்குடி : தஞ்சாவூர் மாவட்டம் திருமண்டங்குடியில் உள்ள திருஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகம், கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஓராண்டுக்கும் மேலாக கரும்பு விவசாயிகள் தொடர் போராட்டத்தை, சர்க்கரை ஆலைக்கு முன் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த ஆலையை வாங்கிய புதிய நிர்வாகம், பல விவசாயிகளுக்கு நிலுவை தொகையை வழங்கி விட்டதாக கூறப்படுகிறது.
அனைத்து விவசாயிகளுக்கும் நிலுவைத் தொகையை பாக்கியின்றி வழங்க வலியுறுத்தி, 413வது நாளான நேற்று, திருமண்டங்குடி அருகே உள்ள கூனஞ்சேரி சுடுகாட்டில், கைகளில் கருப்பு கொடிகளை ஏந்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தமிழக அரசையும், மாவட்ட நிர்வாகத்தையும் கண்டித்து கரும்பு விவசாயிகள் கோஷமிட்டனர்.