/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
2 வயது குழந்தை சர்க்கரை நோய் பாதிப்பால் இறப்பா போலீஸ் விசாரணை
/
2 வயது குழந்தை சர்க்கரை நோய் பாதிப்பால் இறப்பா போலீஸ் விசாரணை
2 வயது குழந்தை சர்க்கரை நோய் பாதிப்பால் இறப்பா போலீஸ் விசாரணை
2 வயது குழந்தை சர்க்கரை நோய் பாதிப்பால் இறப்பா போலீஸ் விசாரணை
ADDED : ஜூன் 15, 2024 02:15 AM
ஆண்டிபட்டி:தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே சித்தார்பட்டியை சேர்ந்தவர் பாண்டியன் 28, இவரது மனைவி தமிழ்ச்செல்வி, இவர்களுக்கு லிஸ்மிதா ஸ்ரீ 2, லிகிதா ஸ்ரீ (7 மாதம்) என்ற இரு குழந்தைகள் உள்ளனர்.
நேற்று முன் தினம் இரு குழந்தைகளையும் வீட்டில் வைத்து கதவை சாத்திவிட்டு தாய் தமிழ்ச்செல்வி கடைக்கு சென்று விட்டார். வீட்டில் குழந்தைகளின் அழுகை சத்தம் கேட்டு உறவினர்கள் கதவைத் தள்ளி பார்த்துள்ளனர். அப்போது குழந்தைகளின் வாய் நுரை தள்ளிய நிலையில் இருந்துள்ளது.
தனியார் மருத்துவமனையில் சேர்த்த போது விஷம் ஏதும் சாப்பிடவில்லை என கூறியுள்ளனர். லிஸ்மிதா ஸ்ரீக்கு சுகர் அளவு 400க்கு மேல் இருந்துள்ளது. இதனால் ஆபத்தான நிலையில் சிகிச்சையில் இருந்தவர் இறந்தார். இது குறித்து பாண்டியன் கொடுத்த புகாரில் ராஜதானி போலீசார் விசாரிக்கின்றனர்.