/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
காட்சிப் பொருளான துணிப்பை வழங்கும் தானியங்கி இயந்திரம்
/
காட்சிப் பொருளான துணிப்பை வழங்கும் தானியங்கி இயந்திரம்
காட்சிப் பொருளான துணிப்பை வழங்கும் தானியங்கி இயந்திரம்
காட்சிப் பொருளான துணிப்பை வழங்கும் தானியங்கி இயந்திரம்
ADDED : ஜூன் 10, 2024 05:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார், : குமுளியில் துணிப்பை வழங்கும் தானியங்கி இயந்திரம் பயன்பாடின்றி காட்சி பொருளாக உள்ளது.
தமிழக கேரள எல்லையான குமுளியில் பாலிதீன் பைகளை தடை செய்யும் பொருட்டு தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக துணிப்பை வழங்கும் தானியங்கி இயந்திரத்தை அவுட் போலீஸ் ஸ்டேஷன் சுவற்றில் வைக்கப்பட்டது. 10 ரூபாய் நாணயத்தை செலுத்தினால் ஒரு துணிப்பை வெளியே வரும். ஒரு சில நாட்கள் மட்டுமே இது பயன்பாட்டில் இருந்தது. அதன் பின் காட்சி பொருளாகவே உள்ளது. இதனை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.