/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தனியார் வங்கி மேலாளரிடம் செயின் பறிப்பு
/
தனியார் வங்கி மேலாளரிடம் செயின் பறிப்பு
ADDED : ஜூன் 10, 2024 04:52 AM
கம்பம், : கம்பம் தனியார் வங்கி மேலாளரின் கழுத்தில் அணிந்திருத்த தங்கச் செயினை பறித்து சென்ற காமயக் கவுண்டன்பட்டியை சேர்ந்த சுபாஷை 26, கம்பம் தெற்கு போலீசார் கைது செய்தனர்.
கம்பம் நகராட்சி அலுவலகத்திற்கு பின் பக்கம் உள்ள பென்னிகுவிக் தெருவில் 26 வயது பெண் வங்கி மேலாளர் வசிக்கிறார். கடந்த ஜூன் 5 ல் காலை தனது வீட்டு வாசல் படிக்கு தண்ணீர் தெளிக்க அதிகாலை வெளியே வந்தார். அப்போது டூவீலரில் வந்த மர்ம நபர்கள், மேலாளரின் கழுத்தில் அணிந்திருந்த செயினை பறித்து சென்றார். செயினை பெண் இறுகப் பற்றிக் கொண்டதால் பாதி செயின் தப்பியது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட வங்கி மேலாளரான பெண், கம்பம் தெற்கு போலீசில் புகாரளித்தார். போலீசார் சி.சி.டி.வி., கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, நேற்று காலை காமயகவுண்டன் பட்டியை சேர்ந்த வாலிபர் சுபாஷை கைது செய்தனர். இவர் நாராயணத்தேவன் பட்டியை சேர்ந்தவர். பறித்துச் சென்ற செயின் மீட்கப்பட்டது.