ADDED : ஜூன் 29, 2024 04:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூணாறு : மூணாறு அருகே கே.டி.எச்.பி.
கம்பெனிக்குச் சொந்தமான லெட்சுமி எஸ்டேட் வெஸ்ட் டிவிஷனைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளி மணிக்குச் சொந்தமான பசு மேய்ச்சலுக்கு சென்று விட்டு வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கண்டு பிடிக்க இயலாத நிலையில் அதே பகுதியில் வட்டப்பாறை காட்டில் உடல் பாதி தின்ற நிலையில் பசு இறந்து கிடந்தது. பசுவை புலி தாக்கி கொன்றதாக தெரியவந்தது. அதேபோல் மாட்டுபட்டி எஸ்டேட் கொரண்டிக்காடு பகுதியைச் சேர்ந்த தொழிலாளி ஜார்ஜின் பசுவும் புலியிடம் சிக்கி பலியானது. இரண்டும் சினைப் பசுக்களாகும். புலியின் நடமாட்டம் தொழிலாளர்களை அச்சம் அடைய செய்தது.