/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
/
வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 11, 2024 05:55 AM

தேனி: தேனி கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில்,' கடந்தாண்டு அக்டோபரில் வெளியிடப்பட்ட முதுநிலை ஆர்.ஐ., களுக்கான பதவி உயர்வு சீனியாரிட்டி பட்டியலை ரத்து செய்ய வேண்டும். வருவாய் அலகில் அனைத்துநிலை பணியாளர்களுக்கும் நடப்பு ஆண்டுவரை முதுநிலை பட்டியலை வெளிப்படையாக வெளியிட வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் ராமலிங்கம் தலைமை வகித்தார்.
மாவட்ட செயலாளர் கண்ணன் முன்னிலை வகித்தார். பொருளாளர் சுரேந்திரன், நிர்வாகிகள் ஜாகிர்உசேன், நாகராஜன், வேல்முருகன், சிவன்காளை, சங்கர், ஒச்சாத்தேவன், வீரக்குமார் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.