ADDED : ஜூலை 11, 2024 05:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடமலைக்குண்டு: மயிலாடும்பாறை அருகே தெய்வேந்திரபுரத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி 70, இவரது தோட்டத்தில் அதே ஊரைச் சேர்ந்த ரமேஷ் என்பவர்ஆடுகளை மேய்த்து உள்ளார்.
தோட்டத்தில் ஆடுகளை மேய்க்க கூடாது என்று சொன்னதால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதில் ரமேஷ் கோவிந்தசாமியை கம்பால் தாக்கியதில் பலத்த காயம் அடைந்து, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். மயிலாடும்பாறை போலீசார் விசாரிக்கின்றனர்.