/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தீவிரம் n கம்பம் பள்ளத்தாக்கில் முதல் போக சாகுபடி பணிகள்... n சின்னமனுார் வட்டாரத்தில் நடவுக்கு ஆயத்தம்

ADDED : ஜூன் 10, 2024 05:46 AM
முல்லைப் பெரியாறு பாசனத்தில் கம்பம் பள்ளத்தாக்கில் 14 ஆயிரத்து 707 ஏக்கரில் இருபோக நெல் சாகுபடியாகிறது. கூடலுாரில் ஆரம்பித்து வீரபாண்டி வரை நெல் வயல்கள் உள்ளன. இதில் கம்பம், உத்தமபாளையம், சின்னமனுார் வட்டாரங்களில் அதிக பரப்பு உள்ளது.
ஆண்டுதோறும் ஜூன் முதல் தேதி தண்ணீர் திறக்கப்பட்டு, நாற்றங்கால் வளர்ப்பார்கள். ஜூன் முதல் வாரம் நாற்று விதைப்பார்கள். 25 நாட்களில் நாற்று வளர்ந்தவுடன் பறித்து நடவு செய்வார்கள்.
கடந்த ஜூன் முதல் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. நிலத்தை உழுது தயார் நிலையில் இருந்த விவசாயிகள் நாற்றுக்களை விதைக்க ஆரம்பித்துள்ளனர். ஜூலை முதல் வாரம் நடவு பணிகள் துவங்கும்.
சின்னமனுார் வட்டாரத்தில் அணையிலிருந்து தண்ணீர் திறப்பதற்கு முன்னரே 'லீக்' தண்ணீரை வைத்து நாற்றுகள் வளர்க்க துவங்கி விட்டனர். இன்னமும் 10 நாட்களில் வளர்ந்த நாற்றுகளை பறித்து நடவுப் பணிகள் துவங்கி விடுவர்.
கம்பம் வட்டாரத்தில் கூட பரவாயில்லை. உத்தமபாளையம் வட்டாரத்தில் விவசாயிகள் நாற்றங்காலை இன்னமும் பண்படுத்தாமல் உள்ளனர். நாற்றங்கால் வளர்க்க விதைகளை விதைப்பதற்கே இன்னமும் 10 நாட்களாகி விடும்.
ஆண்டுதோறும் சின்னமனுார் வட்டாரம் முந்தியும், கம்பம், உத்தமபாளையம் வட்டாரங்கள் பின்தங்கியும் இருக்கும். இந்தாண்டும் அதே நிலை தான் உள்ளது. வேளாண் அதிகாரிகள் முயற்சி எடுத்து, ஒரே சமயத்தில் நாற்று வளர்க்கவும், ' நடவு செய்யவும், அறுவடை மேற்கொள்ளவும் இருந்தால், விவசாயிகளுக்கும் நல்லது, வேளாண் துறைக்கும் நல்லது. இதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த அதிகாரிகள் முன்வர வேண்டும்.