/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சபரிமலை விமான நிலைய நில ஆர்ஜித உத்தரவை கேரள அரசு திரும்ப பெற்றது
/
சபரிமலை விமான நிலைய நில ஆர்ஜித உத்தரவை கேரள அரசு திரும்ப பெற்றது
சபரிமலை விமான நிலைய நில ஆர்ஜித உத்தரவை கேரள அரசு திரும்ப பெற்றது
சபரிமலை விமான நிலைய நில ஆர்ஜித உத்தரவை கேரள அரசு திரும்ப பெற்றது
ADDED : ஜூன் 23, 2024 09:33 AM
கம்பம் : கேரளாவில் புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் அருகே கிரீன்பீல்டு விமான நிலையத்திற்கு நிலம் கையகப்படுத்த பிறப்பிக்கப்பட்ட உத்தரவை கேரள அரசு திரும்ப பெற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயில் அருகே எருமேலியில் விமான நிலையம் அமைக்க 10 ஆண்டுகளுக்கு முன் முடிவு செய்யப்பட்டது.
இதற்காக 2570 ஏக்கர் நிலம் கையகப்படுத்த திட்டம் தயாரிக்கப்பட்டது. மத்திய அரசின் வனம் மற்றும் சுற்றுப்புறச்சூழல் அமைச்சகம், பாதுகாப்புத்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியதையடுத்து கேரள அரசு நிலம் கையகப்படுத்த முதற்கட்ட உத்தரவுகளை சில மாதங்களுக்கு முன் பிறப்பித்திருந்தது.
இதற்கிடையே நிலம் கையகப்படுத்தும் கேரள அரசின் உத்தரவை எதிர்த்து அயனா டிரஸ்ட்டின் நிர்வாக அறங்காவலர்கள் சினி புன்னூஸ் என்பவர் கேரள ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார். அதில் 'தங்களின் டிரஸ்ட்டிற்கு சொந்தமான ரப்பர் எஸ்டேட் 2263 ஏக்கர் நிலங்களை சட்டவிரோதமாக கையகப்படுத்த கேரள அரசு முயற்சிக்கிறது,' என, கூறியிருந்தார்.
இந்நிலையில் ஐகோர்ட்டில் கேரள அரசு, சபரிமலை விமான நிலைய நில ஆர்ஜித உத்தரவை வாபஸ் பெற்றுக் கொள்வதாகவும், மீண்டும் ஆய்வு செய்து சமூக ரீதியான பாதிப்புகள் உண்டா என்பதை அறிந்து அதற்குபின் நில ஆர்ஜிதம் செய்ய உள்ளதாகவும் மனு தாக்கல் செய்தது.
கேரள அரசின் இந்த பதிலை தொடர்ந்து நிலம் கையகப்படுத்தும் பணிகள் நிறுத்தி வைக்கப்படுகிறது என்றும், சபரிமலை கிரீன் பீல்டு விமான நிலையம் அமைக்கும் பணிகள் மேலும் கால தாமதம் ஏற்படும் எனவும் தெரிகிறது.