ADDED : ஜூலை 10, 2024 05:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி : தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ஆண்டுக்கு 200 நாட்கள் வேலை வழங்கவும், தினக்கூலியாக ஒரு நபருக்கு ரூ.600 சம்பளம் வழங்க வலியுறுத்தல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்திய கம்யூ., சார்பில் கிராம ஊராட்சிகளில் மாநிலம் தழுவிய மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது.
ஆண்டிபட்டி ஒன்றியம் திம்மரசநாயக்கனூரில் நடந்த போராட்டத்தில் விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகி பெரிசு தலைமை வகித்தார்.
நிர்வாகி முருகன் முன்னிலை வகித்தார். இந்திய கம்யூ., மாவட்ட துணைச் செயலாளர் பரமேஸ்வரன் துவக்கி வைத்தார்.
தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி தலைவர் அக்க்ஷயாவிடம் மனு கொடுத்து சென்றனர்.