/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சாந்தனேரி கண்மாய் ஆக்கிரமிப்பு போலீஸ் பாதுகாப்புடன் அகற்றம்
/
சாந்தனேரி கண்மாய் ஆக்கிரமிப்பு போலீஸ் பாதுகாப்புடன் அகற்றம்
சாந்தனேரி கண்மாய் ஆக்கிரமிப்பு போலீஸ் பாதுகாப்புடன் அகற்றம்
சாந்தனேரி கண்மாய் ஆக்கிரமிப்பு போலீஸ் பாதுகாப்புடன் அகற்றம்
ADDED : ஜூன் 15, 2024 06:56 AM
கடமலைக்குண்டு : க. மயிலாடும்பாறை ஒன்றியம் சிறப்பாறை கிராமத்தில் சாந்தனேரி கண்மாயில் இருந்த ஆக்கிரமிப்புகள் வருவாய்த்துறை மற்றும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மூலம் அகற்றப்பட்டது.
88 ஏக்கர் பரப்புள்ள இக்கண்மாய்க்கு சிறப்பாறை மலைப்பகுதியில் இருந்து வரும் சிற்றோடைகள் மூலம் நீர்வரத்து கிடைக்கிறது.
கண்மாயில் நீர் தேங்கினால் சிறப்பாறை, மூலக்கடை, மந்திச்சுனை, சோலைத்தேவன்பட்டி கிராமங்களில் நிலத்தடி நீர் ஆதாரம் மேம்படும். கண்மாய் நீர் தேக்கப் பகுதியை ஆக்கிரமித்து விவசாயிகள் சிலர் தென்னை, முருங்கை, இலவம், கொட்டை முந்திரி விவசாயம் செய்திருந்தனர்.
ஆக்கிரமிப்பு அதிகம் இருந்ததால் தேங்கும் நீரின் அளவு குறைந்து இப்பகுதியில் விவசாயம், குடிநீருக்கு சிக்கல் ஏற்பட்டது.
கண்மாயில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தினர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வருவாய்த்துறை மூலம் கண்மாய்க்கான இடங்கள் சர்வே செய்யப்பட்டது. ஆனால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை தொடரவில்லை. இந்த பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால் விவசாயம் பாதித்தது. விவசாயிகளின் தொடர் கோரிக்கையை ஏற்று மாவட்ட நிர்வாகம் சாந்தனேரி கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர். மண் அள்ளும் இயந்திரம் மூலம் கண்மாயில் இருந்த தென்னை, இலவம், கொட்டை முந்திரி மரங்கள் அகற்றப்பட்டது.
ஆக்கிரமிப்புகள் மற்றும் பணி பி.டி.ஓ.,க்கள் நாகராஜன், பாலசுப்பிரமணி, மூலக்கடை ஊராட்சி தலைவர் சுப்பிரமணி மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.