/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
விவசாயிகள் உதவித்தொகை பெற தபால் நிலையங்களில் சிறப்பு முகாம்
/
விவசாயிகள் உதவித்தொகை பெற தபால் நிலையங்களில் சிறப்பு முகாம்
விவசாயிகள் உதவித்தொகை பெற தபால் நிலையங்களில் சிறப்பு முகாம்
விவசாயிகள் உதவித்தொகை பெற தபால் நிலையங்களில் சிறப்பு முகாம்
ADDED : ஜூன் 20, 2024 05:12 AM
தேனி: மாவட்ட விவசாயிகள் உதவித் தொகை பெற ஜூன் 30 வரை அனைத்து தபால் நிலையங்களிலும் நடந்து வரும் சிறப்பு முகாம்களில் பயன் பெறலாம.' என, தேனி தபால்துறை கோட்ட கண்காணிப்பாளர் குமரன் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது: பிரதமரின் கிசான் சம்மன்' திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 17 வது தவணைத் தொகையாக ரூ.2 ஆயிரம் ஜூன் 18 ல் வரவு வைக்கப்பட்டுள்ளது. இத் தொகையை தபால் துறையில் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கி வசதியை பயன்படுத்தி அருகில் உள்ள தபால் நிலையங்களில் கட்டணம் இன்றி எடுத்துக் கொள்ளலாம்.
ரூ.10 ஆயிரம் வரை கட்டணம் இல்லை. பயோமெட்ரிக் பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் தங்களது ஆதார் இணைத்துள்ள எந்த ஒரு வங்கிக் கணக்கில் இருந்தும் அருகில் உள்ள தபால் நிலையங்கள், தபால்காரர், கிராமிய தபால் ஊழியர்கள் மூலம் கடடணம் இன்றி ரூ.10 ஆயிரம் வரை பெற்றுக் கொள்ளலாம்.
இதற்காக ஜூன் 30 வரை அனைத்து தபால் நிலையங்களிலும் சிறப்பு முகாம் நடக்க உள்ளன. மேலும் இந்தியா போஸ்ட் மேமென்ட் வங்கி மூலம் வேலை உறுதி திட்ட பயனாளிகள், முதியோர் ஓய்வூதியம், மகளிர் உரிமைத் தொகை, விதவை உதவித்தொகை,மாற்றுத்திறனாளி ஊக்கத்தொகை, அனைத்து சமூக பாதுகாப்புத் திட்டப் பயனாளிகள், காஸ் மானிய பயனாளிகள், மத்திய மாநில அரசுகளின் அனைத்து நலத்திட்ட பயனாளிகள் ஏ.டி.எம்., இயந்திரங்களை தேடி செல்லும் நிலையை தவிர்த்து அருகில் உள்ள தபால் நிலையங்களில் வங்கிக் கணக்கில் கட்டணம் இன்றி பணம் பெறலாம் என தெரிவித்துள்ளார்.