/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க தமிழக-கேரள அதிகாரிகள் ஆலோசனை
/
ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க தமிழக-கேரள அதிகாரிகள் ஆலோசனை
ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க தமிழக-கேரள அதிகாரிகள் ஆலோசனை
ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க தமிழக-கேரள அதிகாரிகள் ஆலோசனை
ADDED : ஜூன் 30, 2024 04:49 AM
கம்பம், : அரிசி கடத்தலை தடுக்க கம்பத்தில் தமிழக கேரள அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தல் அதிகரித்து வருகிறது. ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க உத்தமபாளையத்தில் உணவு கடத்தல் தடுப்பு போலீஸ் ஸ்டேசன் உள்ளது. வட்ட வழங்கல் துறையின் சார்பிலும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. ஆனால் கடத்தலை தடுப்பதில் சிக்கல்கள் எழுந்து வருகின்றன.
கடத்தலை தடுக்க இரு மாநில போலீஸ் மற்றும் வருவாய் துறையினர் இணைந்து செயல்பட அவ்வப்போது ஆலோசனை கூட்டங்கள் நடத்துவது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் கம்பம் நகராட்சியில் மாவட்ட வழங்கல் அலுவலர் சாந்தி தலைமையில் இருமாநில அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது . கூட்டத்தில் பீர்மேடு வட்ட வழங்கல் அலுவலர் மோகனன், உத்தமபாளையம் புட் செல் இன்ஸ்பெக்டர் கீதா உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
சோதனை சாவடிகளில் காய்கறி ஏற்றி வரும் வாகனம், சரக்கு வாகனங்கள், பால் லாரி உள்ளிட்ட அனைத்து வாகனங்களையும் தீவிர சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது.