/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
18ம் கால்வாய் நீரில் மிதந்து வரும் மதுபாட்டில்கள்
/
18ம் கால்வாய் நீரில் மிதந்து வரும் மதுபாட்டில்கள்
ADDED : ஜன 17, 2024 01:05 AM

கூடலுார் : கூடலுார் 18ம் கால்வாய் கரைப்பகுதியில் குடிமகன்கள் மதுபாராக பயன்படுத்துவதுடன் காலி மதுபாட்டில்களை கால்வாயில் தூக்கி வீசுவதால் குப்பையுடன் சேர்ந்து தண்ணீரில் மிதந்து வருகிறது.
கூடலுார் 18ம் கால்வாய் கரைப்பகுதி முழுவதும் குடிமகன்களின் பாராக பயன்படுத்தப்பட்டு வருகிறது. தினந்தோறும் காலை, மாலை நேரங்களில் கரைப்பகுதியில் ஆங்காங்கே கும்பலாக அமர்ந்து மது குடிக்கின்றனர். போதை தலைக்கேறியதும் மது பாட்டில்களை ஆங்காங்கே உடைத்து விட்டு செல்கின்றனர். மேலும் சிலர் ஒட்டியுள்ள கால்வாயில் தூக்கி வீசிச் செல்கின்றனர்
கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் குப்பையுடன் சேர்ந்து ஏராளமான மது பாட்டில்கள் மிதந்து வருகின்றன. சிறு பாலங்களில் இவைகள் சிக்கி தண்ணீர் வெளியேற முடியாத நிலையில் உள்ளது.
நேற்று டாஸ்மாக் கடை விடுமுறை இருந்தபோதிலும், 18ம் கால்வாய் கரைப்பகுதியில் மது குடித்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருந்தது.

