ADDED : ஜூன் 01, 2025 12:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி: வைகை அணை அருகே முதலக்கம்பட்டியைச் சேர்ந்த வேல்முருகன் - முனியம்மாள் இவர்களின் மகள் விஜயலட்சுமி 19, கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
சில நாட்களுக்கு முன் சொந்த ஊருக்கு வந்திருந்த அவர் மே 28 ல் கோவைக்கு அவர் வேலை பார்க்கும் நிறுவனத்திற்கு செல்வதாக கூறி சென்றுள்ளார். ஆனால் நிறுவனத்திற்கு வேலைக்கு செல்லவில்லை. பல இடங்களில் தேடியும் உறவினரிடம் விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து முனியம்மாள் புகாரில் வைகை அணை போலீசார் விசாரிக்கின்றனர்.