/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பொது இடங்களில் பட்டாசு வெடிப்பதால் மாசுபடும் காற்று
/
பொது இடங்களில் பட்டாசு வெடிப்பதால் மாசுபடும் காற்று
பொது இடங்களில் பட்டாசு வெடிப்பதால் மாசுபடும் காற்று
பொது இடங்களில் பட்டாசு வெடிப்பதால் மாசுபடும் காற்று
ADDED : ஜூன் 24, 2024 02:06 AM
பட்டாசு அதிகம் வெடிப்பதால் வெளியேறும் புகை காற்றில் கலந்து மாசு ஏற்படுகிறது.
இவ்வாறான விழிப்புணர்வு அற்ற செயல்களால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. இப்பாதிப்பிற்கு பல காரணிகள் இருந்தாலும், இவை அனைத்தையும் முறியடித்து இதற்கான ஒரே தீர்வு மரக்கன்றுகள் வளர்ப்பது மட்டுமே. அவை காற்றில் இருந்து வரும் தூசிகளை தடுக்கின்றன. நிலத்தடி நீரை தூய்மைப்படுத்துவதில் மரங்கள் பெரும்பங்காற்றுகின்றன. மரங்கன்றுகள் வளர்ந்து மண் வளம் பாதுகாக்கப்பட்டாலே மனிதன் சுத்தமான காற்றை சுவாசிக்கலாம். எப்படி வேண்டுமானாலும் பொருளாதார வளர்ச்சி அடையலாம் என்பதை மாற்றி சுற்றுச்சூழலை பாதிக்காத வளர்ச்சியாக இருக்க பசுமை கட்டடங்கள், பசுமைக் கொள்கை, தண்ணீர் பாதுகாப்பு, கழிவு மேலாண்மை ஆகியவற்றை பின்பற்ற வேண்டும். இவற்றை மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பயிற்சி அளிக்க வேண்டும். கூடலுாரில் குப்பை ஒழிப்பில் நகராட்சி நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு சுத்தம் சுகாதாரமானதாக மாற்ற முயற்சி செய்ய வேண்டும். இதற்கு மக்களின் ஒத்துழைப்பும் அவசியம். தற்கால விவசாய முறைகள், ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் ஆகியவை மண் மாசு அடைவதற்கு முக்கிய காரணமாக உள்ளன. கடந்த சில மாதங்களாக கூடலுாரில் பட்டாசு வெடிப்பது அதிகரித்துள்ளது. அதிலிருந்து வெளியேறும் புகை காற்றை மாசு அடையச் செய்கிறது. மேலும் வெளியேறும் குப்பை சுகாதாரக் கேட்டை ஏற்படுத்தி வருகிறது. இதனை கூடலுார் நகராட்சி நிர்வாகமும், மாசுக்கட்டுப்பாடு வாரியமும் கண்டு கொள்ளவில்லை.மனித வாழ்நாள் குறையும்ப.புதுராஜா, கூடலுார்:கூடலுாரில் மாசு ஏற்படுவதை தடுக்க நகராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியமாக உள்ளது. பாலிதீன் பயன்பாட்டை தடுக்க அவ்வப்போது பெயரளவில் சோதனை செய்து அபராதம் விதிப்பது நிரந்தர நடவடிக்கையாக அமையாது. அதே போல் பட்டாசு அதிகம் வெடிப்பதால் வெளியேறும் புகை காற்றுடன் கலப்பதால், மக்கள் சிறிது சிறிதாக பாதிக்கப்படுவர். பொதுநல அமைப்புடன் நகராட்சி நிர்வாகமும் இணைந்து பட்டாசு வெடிப்பதை தடுக்க வேண்டும். இல்லாவிட்டால் இன்னும் சில ஆண்டுகளில் மனிதனின் வாழ்நாள் மிகக் குறைந்து விடும்.செ.திராவிடமணி, கூடலுார்:மரங்கள் வெட்டப்படுவதால் பூமி எளிதில் வெப்பமயமாகிறது. நிலத்தடி தண்ணீர் அளவு குறைந்து வருகிறது. மண் அரிப்பு ஏற்படுகிறது. போதிய ஆக்சிஜன் கிடைப்பது இல்லை. மழையின் சராசரி அளவு குறைந்து வருகிறது. இவைகளை சமநிலைப்படுத்த மரங்கன்றுகளை அதிகம் வளர்த்தே ஆக வேண்டிய நிலையில் உள்ளோம். பூமி அழிவின் முதல் காரணமும், கடைசி காரணமும் பாலிதீன் பயன்பாட்டினால்தான் இருக்கும். பாலிதீன் பைகள் அத்தியாவசிய பொருளாக மாறிவிட்டன. பாலிதீன் பைகளை தெருக்களிலும், நீர் நிலைகளிலும் வீசுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. இதனை பயன்படுத்துவதை தவிர்த்து ஒவ்வொருவரும் மரக்கன்றுகளை நடுவதில் ஆர்வம் காட்டினாலே மாசில்லா கூடலுாரை உருவாக்க முடியும், என்றார்.