ADDED : ஜன 26, 2024 06:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனியில் அ.ம.மு.க., சார்பில் பூத் கமிட்டி ஆலோசனைக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு வடக்கு மாவட்ட செயலாளர் காசிமாயன்,தெற்கு மாவட்ட செயலாளர் முத்துசாமி தலைமை வகித்தனர்.
புதிய நிர்வாகிகள் அறிமுகம் செய்யப்பட்டனர். மேலும் பூத் கமிட்டியின் செயல்பாடுகள் பற்றி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. கட்சியின் பொதுச்செயலாளர் தினகரன் தேனி லோக்சபா தொகுதியில் போட்டியிட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் மாநில அமைப்புச்செயலாளர் கதிர்காமு, எம்.ஜி.ஆர்., இளைஞரணி துணைச்செயலாளர் சுரேஸ்குமார் உள்ளிட்ட நிர்வாகிககள் பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை தேனி நகர செயலாளர்கள் குருகணேசன், விஜயராஜன் செய்திருந்தனர்.

