ADDED : ஜன 17, 2024 01:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே கடற்கரை நாடார் தெரு அமைந்துள்ளது. இந்த தெருவில் மளிகை, அலைபேசி உள்ளிட்ட ஏராளமான கடைகள் உள்ளன. இந்த கடை வீதியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று முன்தினம் கூட்டம் அதிகம் காணப்பட்டது. வியாபாரம் முடிந்த நிலையில் வியாபாரிகள் நேற்று முன்தினம்  காலை கடை திறக்க வந்தனர்.
ஆனால் 2 மளிகை கடைகள், ஒரு பேன்சி ஸ்டோர், கெமிக்கல் கடை உள்ளிட்ட 4 கடைகளில் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போது, நள்ளிரவில் ஒருவர் பூட்டுகளை உடைக்க முயற்சிப்பது போன்ற காட்சிகள் பதிவாகி உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரிக்கின்றனர்.

