/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கூடைப்பந்து போட்டி: கம்பம் -- கும்பகோணம் அணி மோதல்
/
கூடைப்பந்து போட்டி: கம்பம் -- கும்பகோணம் அணி மோதல்
கூடைப்பந்து போட்டி: கம்பம் -- கும்பகோணம் அணி மோதல்
கூடைப்பந்து போட்டி: கம்பம் -- கும்பகோணம் அணி மோதல்
ADDED : ஜன 26, 2024 06:18 AM

போடி: போடி கூடைப்பந்தாட்ட கழகம் சார்பில் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி சுப்புராஜ் நகர் நகராட்சி விளையாட்டு மைதானத்தில் நடந்து வருகிறது.
இரண்டாம் நாள் போட்டியை தேனி எல்.எஸ்., மில் உரிமையாளர் பிரபாகரன், தேனி மாவட்ட கூடைப்பந்தாட்ட கழக தலைவர் சிதம்பர சூரியவேலு துவக்கி வைத்தனர்.
போட்டியில் கம்பம் பென்னிகுவிக் கூடைப்பந்தாட்ட அணியும், கும்பகோணம் துரை அகடாமி அணியும் மோதின.
இதில் 63 : 60 புள்ளிக் கணக்கில் கம்பம் பென்னிகுவிக் அணி வென்றது. திண்டுக்கல் ஜி.எஸ்., கூடைப்பந்தாட்ட அணியும், போடி கூடைப்பந்தாட்ட அணியும் மோதின. இதில் 47 : 29 புள்ளி கணக்கு திண்டுக்கல் ஜி.எஸ்., அணி வென்றது. தேனி எல்.எஸ்., மில் கூடைப்பந்தாட்ட அணியும், மதுரை புல்ஸ் அணியும் மோதின. இதில் 69 : 59 புள்ளி கணக்கில் தேனி எல்.எஸ்., மில் அணி வென்றது.
சென்னை எஸ்.ஆர்.எம்., கூடைப்பந்தாட்ட அணியும், போடி ஹோப்ஸ்டார் அகடாமியும் மோதின. இதில் 89 : 59 புள்ளி கணக்கில் சென்னை எஸ்.ஆர்.எம்., அணி வென்றது.
சென்னை எஸ்.பி.ஓ. அகடாமியும், கரூர் ஹேண்ட்லூம் சிட்டி அணியும் மோதின. இதில் 66 : 53 புள்ளி கணக்கில் சென்னை எஸ்.பி.ஓ., அகடாமி அணி வென்றது.
ஏற்பாடுகளை போடி கூடைப்பந்தாட்ட கழக தலைவர் தெய்வேந்திரன், செயலாளர் சந்தோஷ் குமார், பொருளாளர் சீனிவாசன் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்தனர்

