/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வழக்கறிஞரை மிரட்டிய 9 பேர் மீது வழக்கு
/
வழக்கறிஞரை மிரட்டிய 9 பேர் மீது வழக்கு
ADDED : ஜன 10, 2024 12:45 AM
தேனி : கூழையனுாரில் தனது பராமரிப்பில் இருந்த நிலத்தை பார்க்கச் சென்ற வழக்கறிஞரை அரிவாளால் மிரட்டிய 9 பேர் மீது, வீரபாண்டி போலீசார் கொலை மிரட்டல் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
கூழையனுார் விஜயராகவன். இவருக்கு ஒரு ஏக்கர் 93 சென்ட் நிலம் உள்ளது. இவரின் நிலத்தை அதேப்பகுதி கோபிநாத் 2012 ஆக., 14ல் கிரையம் முடித்து பெற்றார்.
பின் தொடர்ந்து பராமரிக்க முடியாததால் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞராக பணிபுரியும் தனது நண்பரும் சென்னை கோட்டூர் வாட்டர் கேனால் ரோட்டை சேர்ந்தருக்மாங்கதனுக்கு 54, கடந்த 2023 டிச., 15ல் ப பவர் ஆப் அத்தாரிட்டி வழங்கினார்.
அந்த நாள் முதல் வழக்கறிஞர் பராமரித்து வந்தார். இந்நிலையில் கடந்த டிசம்பர் 15ல் கூழையனுார் நிலத்தை பார்க்க வழக்கறிஞர் சென்றார். அதேப்பகுதியை சேர்ந்த சாமியாடி, செயான், அவரது மனைவி, முருகன், இளங்கோ மற்றும் 4 நபர்கள் இணைந்து, நிலத்தில் அத்துமீறி நுழைந்து வரப்புகளை சேதப்படுத்திக் கொண்டிருந்தனர்.
இதை தட்டிக்கேட்ட வழக்கறிஞரை ஆயுதங்களை காட்டி மிரட்டி நிலத்திற்கு நுழைய விடாமல் தடுத்தனர்.
பின் இளங்கோ என்பவர், ரூ.5 லட்சம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்தார்.
வழக்கறிஞர் 2023 டிச., 16ல் எஸ்.பி.,யிடம் புகார் அளித்தார். எஸ்.பி., உத்தரவில் வீரபாண்டி எஸ்.ஐ., கோகுலகண்ணன் 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

