ADDED : ஜூன் 27, 2025 05:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி: கொத்தப்பட்டியைச் சேர்ந்தவர் ராமு 49, இவரது மகன் பிரவீன் 19, மதுரை சோழவந்தான் விவேகானந்தா கல்லூரியில் விடுதியில் தங்கி பி.காம்.,2ம் ஆண்டு படித்து வருகிறார்.
ஜூன் 22 ல் கொத்தப்பட்டி வந்த அவர் மீண்டும் கல்லூரி விடுதிக்கு செல்வதாக கூறி சென்றுள்ளார். ஆனால் அவர் கல்லூரிக்கு வரவில்லை என நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியாததால் தந்தை ராமு புகாரில் ராஜதானி போலீசார் விசாரிக்கின்றனர்.