/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
போடி-மதுரைக்கு காலை ரயில் இயக்க பரிசீலனை: கூடுதல் பொது மேலாளர் ஆய்வு
/
போடி-மதுரைக்கு காலை ரயில் இயக்க பரிசீலனை: கூடுதல் பொது மேலாளர் ஆய்வு
போடி-மதுரைக்கு காலை ரயில் இயக்க பரிசீலனை: கூடுதல் பொது மேலாளர் ஆய்வு
போடி-மதுரைக்கு காலை ரயில் இயக்க பரிசீலனை: கூடுதல் பொது மேலாளர் ஆய்வு
ADDED : மார் 18, 2025 01:24 AM

போடி; போடி- மதுரை இடையே தினசரி காலையில் ரயில் இயக்க பரிசீலனையில் உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
மதுரை -- போடி இடையே உள்ள 96 கி.மீ., தூர அகல ரயில் பாதை ரூ.98.33 கோடி செலவில் மின் மயமாக்கப்பட்டுள்ளது. 120 கி.மீ., வேகத்தில் ரயில் இயக்கப்படுகிறது.
சென்னை சென்ட்ரல்-போடி இடையே மதுரை வழியாக 18 பெட்டிகளுடன் அதிவிரைவு ரயில் வாரத்தில் மூன்று நாட்கள் இயக்கப்படுகிறது. இது தவிர மதுரையில் காலை 8:20 மணிக்கு பாசஞ்சர் ரயில் புறப்பட்டு போடிக்கு காலை 10:00 மணிக்கு வந்து மாலை 5:50க்கு புறப்பட்டு மதுரை செல்கிறது. அதுவரை அந்த ரயில் போடியிலேயே நிறுத்தப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் நேற்று தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் கவுசல் கிஷோர் மதுரை -- போடி இடையே ரயில்வே ட்ராக், மின்சார செயல் பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். மதுரை கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் நாகேஸ்வரராவ் இருந்தார்.
அதிகாரிகளிடம் போடியில் இருந்து மதுரைக்கு காலையில் ரயில் இயக்க வேண்டும். போடி -- மதுரை, திருச்சி, ராமேஸ்வரத்திற்கு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்தனர். தினசரி காலையில் போடியில் இருந்து மதுரைக்கு ரயில் இயக்குவது பரிசீலனையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.