/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
9 ரேஷன் கடைகளுக்கு ரூ.1.37 கோடியில் கட்டடம்
/
9 ரேஷன் கடைகளுக்கு ரூ.1.37 கோடியில் கட்டடம்
ADDED : ஜூன் 20, 2025 03:52 AM
தேனி: மாவட்டத்தில் ரூ.1.37 கோடி மதிப்பில் 9 இடங்களில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ரேஷன் கடைகளுக்கு புதிய கட்டடங்கள் அமைக்கும் பணி நடக்கிறது.
ஆண்டிப்பட்டி சட்டசபை தொகுதியில் ஆத்தங்கரைப்பட்டி ஊராட்சியில் அண்ணா நகரில் ரூ. 13.3 லட்சத்தில் பணிகள் நடக்கிறது. பெரியகுளம் தொகுதி பொம்மிநாயக்கன்பட்டியில் ரூ.13.3 லட்சத்தில், தேவதானப்பட்டி பேரூராட்சி 13வது வார்டு தெற்கு தெருவில் ரூ. 22 லட்சம் மதிப்பில், தேனி நகராட்சி 20வது வார்டு கே.ஆர்.ஆர்., நகரில் ரூ. 16 லட்சத்தில் பணிகள் நடக்கிறது.
போடி தொகுதியில் நகராட்சி தென்றல்நகர், வ.உ.சி., நகர், 20வது வார்டு எஸ்.எஸ்., புரம் ரோடு அருகே என 3 இடங்களில் தலா ரூ.15 லட்சத்தில் பணிகள் நடக்கிறது. கம்பம் தொகுதியில் உத்தமபாளையம் பேரூராட்சியில் 17 வது வார்டு, ஓடைப்பட்டி பேரூராட்சியில் ராயர்குல தெரு என இரு இடங்களில் தலா ரூ.14 லட்சத்தில் பணிகள் நடக்கிறது.