/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தாய் உயிரிழப்பு : மகள் பணியில் இருந்து நீக்கம்
/
தாய் உயிரிழப்பு : மகள் பணியில் இருந்து நீக்கம்
ADDED : ஜன 26, 2024 06:23 AM
மூணாறு: இடுக்கி மாவட்டம் குமுளி அருகே அட்டப்பள்ளம் லட்சம் காலனியில் வாடகை வீட்டில் வசித்தவர் அன்னக்குட்டிமாத்யூ 76. இவரது மகள் ஷிஜி, மகன் சஜிமோன் ஆகியோர் திருமணம் முடிந்து குடும்பத்தினருடன் வசிக்கின்றனர். பிள்ளைகள் இருவரும் நோயால் பாதித்த தாயார் அன்னக்குட்டி மாத்யூவை பராமரிக்காததால் சில தினங்களுக்கு முன்பு இறந்தார்.
அவர்கள் மீது பெற்றோர், மூத்த குடிமக்கள் பாதுகாப்பு, நலம் ஆகியவற்றை உறுதி படுத்தும் 2007 ன் சட்டத்தின் கீழ் குமுளி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
பணி நீக்கம்: குமுளி ஊராட்சியில் ஷிஜி தற்காலிக பணியாளராக வேலை செய்தார். அவரை பணியில் இருந்த நிர்வாகம் நீக்கியது. குமுளியில் கேரளா வங்கியில் பணம் வசூலிக்கும் ஏஜன்டாக சஜிமோன் உள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு நிர்வாகத்திடம் பரிந்துரைத்து போலீசார் அறிக்கை தாக்கல் செய்ததால் அவர் மீதும் நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது.

