ADDED : பிப் 02, 2024 12:13 AM

தேனி: பல்லாவரம் தி.மு.க., எம்.எல்.ஏ., கருணாநிதி மகன், மருமகள் பட்டியல் சமுதாய பெண்ணை வன்கொடுமை செய்த விவகராகரத்தில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் தேனி பங்களா மேட்டில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் ராமர் தலைமை வகித்தார். தேனி நகர செயலாளர் கிருஷ்ணகுமார், முன்னாள் எம்.பி., பார்த்திபன் முன்னிலை வகித்தனர். பெரியகுளம் ஒன்றிய பொறுப்பாளர் அன்னபிரகாஷ், மாவட்ட அவைத்தலைவர் முருகன், துணைச்செயலாளர்கள் ஜெயக்குமார், உஷாராணி, மதுரை மண்டல ஐ.டி., பிரிவு துணைச்செயலாளர் பாலசந்தர் உள்ளிட்ட நிர்வாகிகள், ஆண்டிப்பட்டி, பெரியகுளம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
கம்பம்: தேனி மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கம்பம் வ.உ.சி., திடலில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு மேற்கு மாவட்ட செயலாளர் ஜச்கையன் தலைமை வகித்தார். தி.மு.க. அரசை கண்டித்து கோஷங்கள் போடப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் இளையநம்பி, பொதுக் குழு உறுப்பினர் சிவக்குமார், மாவட்ட அவைத் தலைவர் கணேசன் மற்றும் நகர், ஒன்றிய செயலாளர்கள் பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை கம்பம் வடக்கு, தெற்கு அ.தி.மு.க நிர்வாகிகள் செய்திருந்தனர்.

