/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தி.மு.க., கவுன்சிலரை கண்டித்து பேரூராட்சி அலுவலகம் முற்றுகை
/
தி.மு.க., கவுன்சிலரை கண்டித்து பேரூராட்சி அலுவலகம் முற்றுகை
தி.மு.க., கவுன்சிலரை கண்டித்து பேரூராட்சி அலுவலகம் முற்றுகை
தி.மு.க., கவுன்சிலரை கண்டித்து பேரூராட்சி அலுவலகம் முற்றுகை
ADDED : ஜன 06, 2024 06:48 AM

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி பேரூராட்சி 2வது வார்டு தி.மு.க.,கவுன்சிலர் பாலசுப்பிரமணியை கண்டித்து பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இந்த வார்டில் திருவள்ளுவர் காலனி 1, 2, 3வது தெருக்கள், தோப்பு முனியாண்டி கோயில் தெரு, ஆதிதிராவிடர் தெரு ஆகியவற்றில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர்.
ஆண்டிபட்டி - சேடப்பட்டி கூட்டுக்குடி திட்டம், ஜம்புலிபுத்தூர் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் வாரம் ஒரு முறை குடிநீர் வினியோகம் உள்ளது. அன்றாட தேவைக்கு திருவள்ளுவர் காலனியில் உள்ள கிணற்றிலிருந்து உப்பு நீர் தினமும் வினியோகம் செய்யப்படுகிறது.
மூன்று நாட்களாக உப்பு நீர் வினியோகம் இல்லை.
இது குறித்து பொதுமக்கள் கவுன்சிலர்களிடம் முறையிட்டதற்கு முறையான பதில் கூறவில்லை. ஆத்திரம் அடைந்த பெண்கள் கவுன்சிலரை கண்டித்து 50க்கும் மேற்பட்டவர்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். கவுன்சிலர் அலுவலகத்திற்கு வந்து உப்பு நீர் நிறுத்தப்பட்டதற்கு தகுந்த காரணம் கூற வேண்டும் என போராட்டத்தை தொடர்ந்தனர்.
பேரூராட்சி அலுவலர்கள், போலீசார், கவுன்சிலர் பாலசுப்ரமணியத்தை பேரூராட்சி அலுவலகத்திற்கு வரவழைத்தனர். பொதுமக்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்வதற்கு கவுன்சிலர் ஒத்துழைப்பு தருவதாக உறுதி அளித்த பின் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

