/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தமிழக முதல்வர் அடிக்கல் நாட்டிய கட்டட பணியை நிறுத்த நோட்டீஸ்; கம்பம் நகராட்சியில் தி.மு.க.,கவுன்சிலர்கள் வெளிநடப்பு

ADDED : மே 25, 2025 05:10 AM
கம்பம் : கம்பம் கம்ப ராயப் பெருமாள் கோயில் வளாகத்தில் தமிழக முதல்வரால் காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டிய திருமண மண்டபம் கட்டும் பணிகளை நிறுத்த நகராட்சி நோட்டீஸ் கொடுத்து நிறுத்தியது ஏன் என கேட்டு ஆறு தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
கம்பம் நகராட்சி கூட்டம் தலைவர் வனிதா (தி.மு.க.)தலைமையில் நடந்தது. கமிஷனர் உமாசங்கர் , பொறியாளர் அய்யனார், உதவி பொறியாளர் சந்தோஷ் குமார் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது:
இளம்பரிதி ( தி.மு.க. ): ஏரியூட்டு மயானத்திற்கு அடிக்கடி பராமரிப்பு என்ற பெயரில் லட்சக்கணக்கில் பணம் செலவழிக்கப்படுகிறது. அங்கு என்ன தான் நடக்கிறது. பராமரிப்பு தீர்மானத்தை நிறுத்தி வையுங்கள். செயல்படுத்த கூடாது.
நகரமைப்பு அலுவலர் கணேஷ்குமார்: முறையாக டெண்டர் விட்டு பணிகள் நடைபெறுகிறது. தற்போது அனுமதி கேட்டு தான் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. வேண்டுமானால் ஆவணங்களை ஆய்வு செய்து கொள்ளலாம்.
தி.மு.க. கவுன்சிலர்கள் இளம்பரிதி, குரு குமரன், பார்த்திபன், சுபத்ரா, வசந்தி, சம்பத்குமார் ஆகியோர் , கம்பம் கம்ப ராயப் பெருமாள் கோயில் வளாகத்தில் திருமண மண்டபம் கட்ட கடந்தாண்டு காணொலி மூலம் தமிழக முதல்வர் அடிக்கல் நாட்டினார். ஆனால் நகராட்சி சார்பில் நோட்டீஸ் கொடுத்து கட்டடம் கட்டும் பணியை நிறுத்தி உள்ளீர்கள். முதல்வர் அடிக்கல் நாட்டிய திட்டத்தை நிறுத்த நகராட்சிக்கு அதிகாரம் உள்ளதா என கேள்வி எழுப்பினர்.
நகரமைப்பு அலுவலர் கணேஷ்குமார்: எல்லா கட்டுமானங்களுக்கும் வழக்கமாக வழங்கும் நோட்டீஸ் அந்த திருமண மண்டப கட்டுமானத்திற்கும் தரப்பட்டது. அப்போது கவுன்சிலர் களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
அதிகாரிகள் விளக்கம் திருப்தியளிக்கவில்லை எனக் கூறி ஆறு தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.