/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வரதட்சணை கொடுமை: கணவர் உட்பட 11 பேர் மீது வழக்கு
/
வரதட்சணை கொடுமை: கணவர் உட்பட 11 பேர் மீது வழக்கு
ADDED : ஜூலை 04, 2025 03:38 AM
ஆண்டிபட்டி: பெண்ணிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கணவர் உள்பட 11 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
கண்டமனூர் அருகே குப்பிநாயக்கன்பட்டி சுவாதி 26, இவருக்கும் மதுரை திருநகர் குறிஞ்சி நகரை சேர்ந்த ஹேமராஜ் என்பவருக்கும் 27.11.2022ல் திருமணம் முடிந்தது.
சுவாதிக்கு பெற்றோர் 50 பவுன் நகை, ஹேமராஜ்க்கு 5 பவுன் நகை, ரூ. ஒரு லட்சம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்கள், ரொக்கம் ரூ. 5 லட்சம் கொடுத்துள்ளனர். இருவரும் திருநகரில் உள்ள ஹேமராஜ் பெற்றோர் வீட்டில் வசித்து வந்தனர்.
இந்நிலையில் சுவாதிக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் ஹேமராஜ் அவரது தந்தை கொண்டல்சாமி, உறவினர்கள் ஆனந்தன், திலகவதி, சிவகுமார், செந்தில், செல்வகுமார், சாந்தி, ரேணுகா, மகாலட்சுமி, சீனிவாசகன் ஆகிய 11 பேரும் சேர்ந்து கூடுதலாக 50 பவுன் நகை ரூ.10 லட்சம் ரொக்கம், கார் ஆகியவற்றை வாங்கி வரச் சொல்லி சுவாதியை அடித்து கொடுமைப்படுத்தி வீட்டில் இருந்து விரட்டியதாக போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்துள்ளார். விசாரணை செய்த போலீசார் பெண்ணை கொடுமைப்படுத்திய கணவர் உட்பட 11 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.