/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மூல வைகை ஆறு வறண்டதால் குடிநீர் உறை கிணறுகளுக்கு பாதிப்பு
/
மூல வைகை ஆறு வறண்டதால் குடிநீர் உறை கிணறுகளுக்கு பாதிப்பு
மூல வைகை ஆறு வறண்டதால் குடிநீர் உறை கிணறுகளுக்கு பாதிப்பு
மூல வைகை ஆறு வறண்டதால் குடிநீர் உறை கிணறுகளுக்கு பாதிப்பு
ADDED : செப் 09, 2025 04:42 AM

கடமலைக்குண்டு: மேற்கு தொடர்ச்சி மலை வருஷநாடு மலைப்பகுதியில் உற்பத்தியாகும் மூல வைகை ஆறு வறண்டதால் குடிநீர் உறை கிணறுகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையில் பல சிற்றாறுகள் ஒன்றிணைந்து மூல வைகை ஆறாக வாலிப்பாறையில் துவங்கி, வருஷநாடு, மயிலாடும்பாறை, கடமலைக்குண்டு, துரைச்சாமிபுரம், கண்டமனூர், அம்மச்சியாபுரம், குன்னூர் வழியாக வைகை அணை சென்று சேர்கிறது.
கடந்த சில வாரங்களுக்கு முன் மலைப்பகுதியில் பெய்த மழையால் மூல வைகை ஆற்றில் நீர் வரத்து ஏற்பட்டது. தொடர்ச்சியான மழை இல்லாததால் ஆற்றில் ஏற்பட்ட நீர் வரத்து வைகை அணைக்கு சென்று சேரவில்லை. இந்நிலையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.
மழையும் இல்லாததால் மூல வைகை ஆற்றில் நீர்வரத்து முற்றிலும் நின்று போனது. தற்போது மூல வைகை ஆறு வறண்டு மணல் பரப்பாக காட்சியளிக்கிறது.
இதனால் மூல வைகை ஆற்றில் குடிநீர் உறை கிணறுகளில் நீர் சுரப்பு குறைந்து பல கிராமங்களில் குடிநீர் விநியோகம் பாதித்துள்ளது. வைகை அணை கூட்டுக் குடிநீர் திட்டத்தில் அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் சென்று சேரும் விதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மலை கிராம மக்கள் வலியுறுத்துகின்றனர்.