/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
விதிமீறிய 18 கடைகளில் பூச்சி கொல்லி மருந்துகள் விற்க தடை ஆய்வில் காலாவதியான மருந்துகள் கண்டுபிடிப்பு

ADDED : ஜூன் 28, 2025 12:49 AM

தேனி: மாவட்டத்தில் விதிமீறி செயல்பட்ட 18 கடைகளில் பூச்சிக் கொல்லி மருந்துகள் விற்க தடை விதித்து கலெக்டர் ரஞ்ஜீத்சிங் உத்தரவிட்டுள்ளார். அதிகாரிகள் ஆய்வில் காலாவதியான மருந்துகள் விற்பனைக்கு இருந்தது கண்டு பிடித்தனர்.
மாநில வேளாண் தரக்கட்டுப்பாட்டுத்துறை 38 மாவட்டங்களில் உள்ள தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகளை மாவட்டம் விட்டு மாவட்டம் சென்று ஆய்வு செய்யஉத்தரவிட்டுள்ளது.
அதன்படி துாத்துக்குடி மாவட்ட வேளாண் தரக்கட்டுப்பாட்டு அலுவலர் பிரேம்குமார் தலைமையில், வேளாண் அலுவலர்கள் சுஜாதா, முருகபாரதி,முத்துக்குமார், காயத்திரி, ராமகிருஷ்ணன், நவநீதன், பிரகாஷ் ஆகியோர் கொண்ட 8 பேர் நேற்று முன்தினமும், நேற்றும் தேனி மாவட்டத்தில்ஆண்டிபட்டியில் 11 கடைகள், கடமலைக்குண்டில் 5, சின்னமனுாரில் 8, கம்பம் நகரில் 5, உத்தமபாளையத்தில் 3, பெரியகுளத்தில் 5, போடியில் 6, தேனியில் 4 என,47 கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் 18 கடைகளில் வட்டார வேளாண் உதவி இயக்குனர் ஒப்புதல் பெறாமல்பூச்சிக் கொல்லி மருந்துகளை விற்பனை செய்தது தெரியவந்தது.
மேலும் காலாவதியான பூச்சிக் கொல்லி மருந்துகளை விற்பனைக்காகவைத்திருந்ததும் கண்டறியப்பட்டன.
வேளாண் இணை இயக்குனர் சாந்தாமணி, மாவட்ட தரக்கட்டுப்பாட்டு உதவி இயக்குனர் திலகர்பரிந்துரையில் கலெக்டர் 19 கடைகளுக்கு பூச்சிக் கொல்லி மருந்துகள் விற்க தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.