/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை சிறப்பு முகாம்களில் சுணக்கம்
/
குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை சிறப்பு முகாம்களில் சுணக்கம்
குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை சிறப்பு முகாம்களில் சுணக்கம்
குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை சிறப்பு முகாம்களில் சுணக்கம்
ADDED : ஜன 26, 2024 06:11 AM
கம்பம்: குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை சிறப்பு முகாம்கள் நடத்துவதில் குடும்ப நலத் துறை ஒரு மாதமாக சுணக்கம் காட்டி வருகிறது.
மக்கள் தொகை பெருக்கம் கொரோனா பெருந் தொற்றுக்கு பின் அதிகரிக்கத் துவங்கியுள்ளது.
குறிப்பாக தேனி மாவட்டத்தில் 3 குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள் 200 பேர்களுக்கு மேல் உள்ளது தெரிய வந்துள்ளது. அத்துடன் 20 வயதுக்கு கீழ் திருமணம் முடித்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க துவங்கியுள்ளது. எனவே கடந்த சில மாதங்களாக கலெக்டர் ஷஜீவனா உத்தரவின்பேரில் குடும்ப நலத்துறை பெண்களுக்கு லேப்ரோஸ்கோபி மூலம் குடும்ப அட்டுப்பாடு அறுவை சிகிச்சையும், ஆண்களுக்கு வாசக்டமி அறுவை சிகிச்சையும் தீவிரமாக மேற்கொண்டது. இதற்கென சிறப்பு முகாம்களை நடத்தினார்கள். கலெக்டர் தங்க நாணயம் ஊக்க பரிசாக வழங்கினார்.
குடும்ப நலத்துறையின் தீவிர நடவடிக்கையை பாராட்டி டாடா மெமோரியல் பவுண்டேசன் கடந்த டிச. 18 ல் விருதும், ரூ.2 லட்சத்திற்கான காசோலையும் வழக்கி கவுரவித்தது. விருது பெற்ற பின் குடும்ப நலத்துறை சிறப்பு முகாம்கள் நடத்துவதில் சுணக்கம் காட்டி வருகிறது.  ஒரு மாதமாக சிறப்பு முகாம் ஏதும் நடத்தவில்லை.
இது தொடர்பாக துணை இயக்குநர் அன்புச்செழியனிடம் கேட்டதற்கு,   பிப்ரவரியில் இருந்து தொடர்ந்து சிறப்பு முகாம்கள் நடத்த உள்ளோம்.
இப்போதும் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சைகள் நடந்து வருகிறது என்றார்.

