ADDED : ஜன 28, 2024 04:46 AM

தேனி : டில்லி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தின் போது ஐக்கிய விவசாயிகள் முன்னணி அமைப்புடன் மத்திய அரசு அமைத்த ஒப்பந்தங்களை அமல் படுத்தாததை கண்டித்தும், தொழிலாளர் விரோத சட்டங்களை கைவிட வலியுறுத்தி, ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் தேனியில் வாகன ஊர்வலம் நடந்தது. பொம்மையக்கவுண்டன்பட்டியில் துவங்கிய ஊர்வலம் நேருசிலை வழியாக பங்களாமேட்டில் நிறைவடைந்தது.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கண்ணன் தலைமை வகித்தார். விவசாயிகள் விடுதலை முன்னணி மாவட்டச் செயலாளர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். விவசாயிகள் சங்கம் (சி.பி.ஐ.,) நிர்வாகிகள் பரமேஸ்வரன், காசிவிஸ்வநாதன், அகில இந்திய மகளிர் சங்க மாவட்டச் செயலாளர் (எஸ்.யு.சி.ஐ.,) ராதிகா, விவசாயிகள் சங்க மாவட்ட துணை செயலாளர் வெண்மணி, மாநிலக்குழு உறுப்பினர் ராஜப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த ஊர்வலத்தில் 3 டிராக்டர்கள், 3 ஆட்டோ, 40 டூவீலர்கள் விவசாயிகள் பங்கேற்றனர்.

