ADDED : மே 31, 2025 12:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னமனூர்: சின்னமனூர் அருகே உள்ள மூர்த்திநாயக்கன்பட்டி அய்யப்ப சுவாமி கோயில் தெருவில் வசித்து வருபவர் கருப்பசாமி 45, இவரது மகள் சந்தியா 20. மே 29 காலையில் கடைக்கு சென்று வருவதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை.
பல இடங்களில் தேடியும் மகள் கிடைக்காததால், ஓடைப்பட்டி போலீசில் கருப்பசாமி புகார் செய்தார். எஸ்.ஐ கண்ணன் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றார்.